ஸ்ரீமான் கீரனூர் நடராஜ ஐயர் இயற்றி வெளிவந்துள்ள ‘ஜாதக அலங்காரம்’ எனும் ஒப்புயர்வற்ற நூலை அடியொற்றி இன்னும் பலர் அந்நூலுக்கு விளக்கவுரை அளித்து வேறு பல நூல்களும் வெளிவந்துள்ளன. இந்நூலும் அவ்வாறுதான் அன்னாரின் பாடல்களுக்கு விளக்கமளித்துத்தான் வெளிவருகிறது. எனினும் இதுவரை வெளிவந்துள்ள அனைத்து நூல்களையும் உள்வாங்கிக் கொண்டு தன் திறமையை, ஜோதிடப் புலமையைக் கொண்டு மிகச் சிறப்பாக விளக்கமளித்து இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர்.