nallathaaga naalu vaarthai-classiblogger-books

பணம் முக்கியம். ஆனால் அது ஒன்று மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்க-முடியாது அல்லவா?

மனம் நிறைவாக இல்லாதபோது எவ்வளவு பணம் இருந்து என்ன பயன்?

எத்தனைப் பெரிய பதவியில் இருந்து என்ன பலன்?

என் வீடு, என் மனம், என் நிம்மதி என்று இருப்பதும்கூடச் சாத்தியமில்லை. வீட்டைக் கடந்து சமூகத்தோடு நாம் உறவாட வேண்டியிருக்கிறது. பலவிதமான மனிதர்களோடு நல்லுறவு கொள்ளவேண்டியிருக்கிறது. அதை எப்படிச் செய்வது?

மனிதர்களை எப்படிப் புரிந்துகொள்வது? மகிழ்ச்சியை எப்படிக் கண்டடைவது?

குடும்பம், அலுவலகம், சமூகம் என்று எங்கும் அன்போடும் பண்போடும் திகழ்வது எப்படி?

வாழ்வில் எல்லாமும் பெற்று வளமோடும் மனநிறைவோடும் வாழ்வது எப்படி? பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் பிரபல எழுத்தாளர் சோம. வள்ளியப்பனின் இந்நூல் மனநிறைவளிக்கும் கச்சிதமான செயல் திட்டமொன்றை நம் அனைவருக்கும் வகுத்துக் கொடுக்கிறது.

buy-now-button-local_updates